×

என்னப்பா சரக்குலயே குளிக்கிற! அப்ப அங்க சொன்ன சோகக் கத எல்லாம் நடிப்பா?

பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டுள்ள பாலாஜி முருகதாஸ் என்ற மாடலிங் இளைஞர் தனது சோகக்கதையை சொல்லி ரசிகர்களின் பரிதாபத்தை சம்பாதித்தார்.

 

பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டுள்ள பாலாஜி முருகதாஸ் என்ற மாடலிங் இளைஞர் தனது சோகக்கதையை சொல்லி ரசிகர்களின் பரிதாபத்தை சம்பாதித்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் தினசரி வாடிக்கையாக மாறியுள்ளது. மெஹா சீரியல்களை விட மோசமாக சென்றுகொண்டு இருக்கும் இந்த சீசனில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் தாங்கள் தங்களது வாழ்வில் கடந்து வந்த பாதைகளை குறித்தும் சில கசப்பான அனுபவங்களை பற்றியும் சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என சொல்லப்பட்டது.. அதில் ஹவுஸ்மேட் பாலாஜி முருகதாஸ் சொன்ன சம்பவம் அனைவரையும் கலங்க வைத்தது. அதில் தன்னுடைய பெற்றோர் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தினம் தினம் குடித்துவிட்டு சிறு வயதில் இருந்து தன்னை கொடுமைப்படுத்தியாக கூறினார்.

சிறு வயதில் பள்ளியில் சேர்த்ததோடு சரி அத்துடன் 12ம் வகுப்பு முடிக்கும் வரை parents meeting கிற்கு கூட வந்ததில்லை. ’உங்களால ஒரு குழந்தையை பெத்து சரியா வளர்க்க முடியலைன்னா நீங்களா குழந்தை பெத்து என்ன பண்ண போறீங்க? என தன்னுடைய பல நாள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

இதையடுத்து அவர் மேல் எல்லோருக்கும் பரிதாபம் ஏற்பட்டது. ஆனால் அவர் சொன்னதுக்கு நேர்மாறாகவே அவரின் பிக்பாஸ்க்கு முந்தைய வாழ்க்கை இருந்துள்ளது. அவரின் சமூகவலைதள போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நோண்டியெடுத்து இப்போது வெளியிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். அதில் ஒரு வீடியோவில் ஷேம்பைன் ஊத்தி பாலாஜி குளிப்பது போல இருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News