×

வாய் பேச முடியாத பெண் நடிகர் லாரன்சிற்கு என்ன சொல்கிறார்!

நடிகர் லாரன்ஸூக்கு வாய் பேச முடியாத பெண் நன்றி சொல்லிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.  தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் ஹீரோவாகவும் இருப்பவர் ராகவா லாரன்ஸ். 

 

இவரின் காஞ்சனா படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் இவர் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். சினிமா மட்டுமின்றி நலத்திட்ட உதவிகள் செய்வதிலும் இவர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் செய்த உதவிக்கு வாய் பேச முடியாத பெண் நன்றி சொல்லியுள்ள வீடியோ வைரல் ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் நிவாரணமாக நிதியுதவி வழங்கிய லாரன்ஸ், மேலும் தன்னால் முடிந்த வரை பலருக்கு உதவி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அவர் கஷ்டப்படுபவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கி வருகிறார்.

இதனிடையே நடிகர் லாரன்ஸ் சார்பில் வழங்கப்பட்ட மளிகை பொருட்களை வாங்கி கொண்ட வாய் பேச முடியாத பெண் ஓருவர், சைகை மொழியில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மனதை உருக்கும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News