Connect with us
கண்ணதாசன்

Cinema News

மது அருந்திவிட்டுதான் கண்ணதாசன் பாடல்களை எழுதுவாரா?..உண்மையை உடைத்த மகள்…

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் எழுதும் போது மது அருந்துவார் என்ற பொதுவாக ஒரு பிம்பம் அனைவரிடத்திலும் இருக்கிறது. இதன் உண்மை விளக்கத்தினை அவரது மகள் வெளியிட்டு இருக்கிறார்.

கண்ணதாசன்

ரேவதி சண்முகம்

பாடல் எழுதுவதில் புகழ் பெற்றவர் கண்ணதாசன். இவருக்கு முதல் மனைவியோட ஏழு பிள்ளைகள், இரண்டாம் மனைவிக்கு பிறந்த ஏழு பிள்ளைகள் என பெரிய குடும்பத்தினை கவனத்து வந்தார். தன் பிள்ளைகளுக்கு எப்போதுமே தனி கவனம் செலுத்துவதில் கவனமாக இருப்பாராம்.

இவரின் மகள்களில் ஒருவர் தான் பிரபல சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம் தனது கண்ணதாசன் குறித்து சில தகவல்களை மனம் திறந்துள்ளார். அதில் அப்பா எப்போதுமே குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பார். அதுமட்டுமல்லாமல் அவர் மது அருந்திவிட்டு பாட்டு எழுதுவார் என்ற பொதுவாக கருத்து இருக்கிறது.

கண்ணதாசன்

கண்ணதாசன்

அது ரொம்பவே தவறு. வேலை நேரத்துல பெரும்பாலும் அப்பா மது அருந்தமாட்டார். எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு, சாப்பிட்ட பிறகுதான் மது அருந்துவார். மது அருந்தாத நேரத்தில்தான் அப்பா பெரும்பாலான நல்ல பாடல்களை எழுதியிருக்கார். மகளாக நான் அவரின் அருகில் இருந்து இதை பார்த்து இருக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

Continue Reading

More in Cinema News

To Top