×

ஊரடங்கு தளர்வில் என்னென்ன செயல்படலாம்... ஸ்பெஷல் ரிப்போர்ட்!

நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

 

அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் சென்னை உள்பட மாவட்டங்களில் எதற்கெல்லாம் அனுமதி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் சென்னையில் அனுமதிக்கப்படும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த சார்ந்த நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

சென்னையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.

கட்டுமானப் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

மொபைல், கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை மையங்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோர் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம். தமிழகத்தில் கட்டுமானப்பொருட்கள் எடுத்துச் செல்ல தடை கிடையாது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை. தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

சென்னையில் 10 சதவீத பணியாளர்களுடன் ஐ.டி.நிறுவனங்கள் செயல்படலாம் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News