×

அஜித், விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா - சினிமாவிற்கு வருமுன் என்ன செய்தனர்?..
 

பிரபலங்களின் பின்னணி பற்றி ஒரு சுவாரசிய தகவல்
 
samantha

சினிமா பிரபலங்கள் அனைவரும் திரைத்துறை குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் இல்லை. ஒருசிலர் தான் அப்படி வந்துள்ளனர். அவர்கள் யார் யார் என அடுத்த கட்டுரையில் பார்ப்பபோம். இப்போது எந்தவித பின்னணியும் இல்லாமல் தன் சொந்த திறமையில் அரும்பாடுபட்டு சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த நடிகர்கள் யார் யார் என பார்க்கலாம். பின்னணியுடன் என்ட்ரி கொடுத்தவர்கள் கூட சில காலம் காணாமல் போய் விடுவார்கள். திரும்ப ரீஎன்ட்ரி கொடுத்தாலும் அவர்களை யாரும் ஏறிட்டுக் கூட பார்ப்பது இல்லை.

சினிமா என்பது ஒரு பொது ஜன ஊடகம். அதனால் இளைஞர்களில் பலருக்கும் எப்படியாவது சினிமாவிற்குள் நுழைந்துவிட வேண்டும் என்று ஒரு தணியாத ஆசை இருக்கும். அந்த வகையில் தினமும் சிலர் படக்கம்பெனிகளுக்கு அலைந்து திரிந்து எப்படியாவது சினிமாவிற்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஊரிலிருந்து சேமித்து வைத்திருந்த கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்னை வந்து விடுவர். 

அங்கு வந்து ஒரு வேளை சோற்றுக்கு கூட வழி இல்லாமல் கஷ்டப்படுவர். தினமும் படக்கம்பெனிகளுக்கும், இயக்குனர் அலுவலகத்திற்கும் அலைந்து திரிந்து கேட் வாசலில் நின்று சினிமா வாய்ப்பைத் தேடியவர்களும் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் தோல்வி அடைந்தும் இருக்கிறார்கள். இன்னும் வரை சினிமாவில் நடித்தும் ஒரு நிலையான இடத்தில் இல்லாமல் சில நடிகர்கள் இருக்கிறார்கள். 

சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் நடிகர் நடிகைகள் என்னென்ன வேலைகள் செய்து கொண்டிருந்தனர் என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று நிறைய பேர் ஆவலாக இருப்பர். அவர்களுக்காக ஒரு சில தகவல்கள்...

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல் திரையுலகிற்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இவர் சினிமா துறைக்குள் வருவதற்கு முன்னர் மெக்கானிக்காக இருந்தவர் என்று பலர் கூறி வந்ததைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இவர் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இவர் மோட்டார பந்தயங்களிலும் ஆர்வமாக கலந்து கொள்வார். 

இவருக்கு சினிமா தவிர மற்ற பொழுதுபோக்கு நேரங்களில் சிறிய ரக குட்டி விமானங்களை இயக்க ஆசை. இவர் வேலூரிலிருந்து சென்னைக்கு அறுவைசிகிச்சைக்காக உறுப்புகளைக் கொண்டு செல்ல குட்டி ரக விமானங்களைத் தயாரிக்கும் குழுவில் ஆலோசகராக இருந்தார். 120 கிலோமீட்டர் வேகத்தில் பாதுகாப்பாக செல்லும் இந்த குட்டி விமானத்தை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்தனர். அஜீத்தின் ஆலோசனைப்படி தக்ஷா மாணவர் குழுவினர் இந்த ஏர் ஆம்புலன்ஸ் வகை குட்டி விமானங்களைத் தரமாகத் தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானம் 15 கிலோ வரையான எடையைத் தூக்கிச் செல்லும் திறன் வாய்ந்தது.

அரவிந்த் சாமி ஆரம்பத்தில் மாடலிங்கில் தான் இருந்தார். அதன் பின்னர் மணிரத்னம் பார்வை முதலில் தளபதி படத்திலும் பின்னர் நாயகனாக ரோஜா படத்திலும் நடித்தார். சினிமாவில் நுழைந்த பின் அவருக்கு நட்சத்திர அந்தஸ்து உடனே கிடைத்தது. யாராவது கிடைத்த வாய்ப்பை விடுவார்களா? ஆனால், இவ்வளவு கிடைத்த பின்னரும் தந்தையின் இரும்பு ஏற்றுமதி தொழிலைக் கவனிக்கச் சென்றவர் தான் அரவிந்த்சாமி. இவர் நடிகனாக எவ்வளவு பேர் சம்பாதித்தாரோ அவ்வளவு பேரையும் தொழிலும் சம்பாதித்துள்ளார். இவர் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அரவிந்த் சாமி சில காலம் தனது  சொந்த கம்பெனியில் ட்ரெய்னிங் மற்றும் டெவலப்மெண்ட் வேலையை செய்து வந்தார். இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். 

நடிகை நயன்தாரா சினிமாவுக்கு வருமுன் ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை செய்து வந்தார். அதேபோல் சினிமாவுக்கு வருமுன் நடிகை சமந்தா கல்யாண வீடுகளில் ரிசப்ஷனில் நிற்கும் பெண்ணாக வேலை செய்து வந்தார். நமீதா சினிமாவுக்கு வரும் முன்; ஒரு மாடலாக இருந்தார். இவர் பள்ளி குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் வேலையை செய்து வந்தார்.
மக்கள் செல்வன விஜய் சேதுபதி சினிமாவிற்குள் வருவதற்கு முன்; துபாயில் கணக்காளராக வேலை செய்து வந்தார. விஷ்ணு விஷால் சினிமா துறைக்கு வரும் முன் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக விளையாட பயிற்சி பெற்று வந்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News