×

வடிவேல் பாலாஜிக்கு என்ன நேர்ந்தது?.. உண்மையை உடைத்த அறந்தாங்கி நிஷா...

 

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேலு பாலாஜி. 

42 வயதான இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். குறிப்பாக நகைச்சுவை நடிகர் வடிவேலு ஸ்டலில் பேசி ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்பதால் இவருக்கு வடிவேலு பாலாஜி என பெயர் வந்தது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் திடீர் மரணம் அடைந்துள்ளார். இவரின் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இவர் மரணத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை. எனவே, வடிவேல் பாலாஜி வருமானமில்லாமல் தவித்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், அதிலிருந்து அவர் எலிமினேட் செய்யப்பட்டார். இதனால், அனைத்து நம்பிக்கையும் அவர் இழந்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடலின் இரு பக்கம் செயலிழந்து போனது. சென்னயில் ஒரு தனியார் மருத்துவமனையில் 15 நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் முன்னேற்றம் இல்லை. மேற்கொண்டு சிகிச்சையை தொடர பணம் இல்லாததால் அவரின் குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்குதான் அவரின் உயிர் பிரிந்துள்ளது.

இந்த தகவலை அவருடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அறந்தாங்கி நிஷா தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News