×

நான் செய்தது தவறுதான்... மன்னித்து விடுங்கள்! மன்னிப்பு கேட்ட குஷ்பு...

நடிகை குஷ்பு எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். தான் செய்யும் விஷயங்கள், நாட்டில் நடக்கும் விஷயங்கள், அரசியல் உட்பட பல்வேறு ட்விட்களை அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

 

கொரோனா முழு அடைப்பு என்பதால் வீட்டிலேயே இருக்கும் குஷ்பு இன்று காலை தான் உடற்பயிற்சி செய்ததாக குறிப்பிட்டு ஒரு போட்டோவை வெளியிட்டார்.

"நல்ல ஒர்கவுட்டை விட சிறந்தது எதுவும் இல்லை. அதற்காக ஒரு விலையுயர்ந்த ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வீட்டிலேயே செய்யலாமா. ஒரு நாளை பாசிடிவ் ஆன விதத்தில் துவங்க இது ஒரு வழி. துவங்குங்கள்.. தாமதம் ஆகிவிடவில்லை. அதுக்கு நான் கேரன்டி" என ட்விட் செய்தார் குஷ்பு.

ஆனால் அந்த ட்விட்டில் not என்கிற வார்த்தையை அவர் போட மறந்துவிட்டார், அதனால் அந்த ட்விட்டின் அர்த்தமே மாறிவிட்டது என அனைவரும் சுட்டிக்காட்டினர். அதற்கு மன்னிப்பு கேட்டு மற்றொரு ட்விட் பதிவிட்டுள்ளார் குஷ்பு.

"ஆக்டிவாக இருப்பவர்கள் எழுதும் போது ஒரு சில வார்த்தைகளை விட்டுவிடுவதுண்டு. அவர்கள் கையை விட மூளை இன்னும் வேகமாக டைப் செய்வது தான் காரணம். நான் அப்படிப்பட்டவர் தான். தவறுக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என குஷ்பு கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News