×

ரஜினி பற்றி நான் பேசியது தவறு... வருத்தம் தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜி

 

ரேடியோ ஜாக்கியாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்.ஜே.பாலாஜி. முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்துள்ள இவர் எல்.கே.ஜி திரைப்படம் மூலம் கதாநாயகனாக மாறினார்.

தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று விஜய் தொலைக்காட்சியிலும், ஹாட் ஸ்டார் ஆப்பிலும் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதில் கூறியபோது ரஜினி பற்றி நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆர்.ஜே.பாலாஜி ‘நான் ரஜினியின் தீவிர ரசிகன். தளபதி முதல் தர்பார் அவரை பற்றி நிறைய நினைவுகள் உள்ளது. அவர் ஒரு சிறந்த மனிதர் என என் தாத்தா என்னிடம் கூறினார். 

சில வருடங்களுக்கு முன்பு அவரின் அரசியல் பிரவேசம் பற்றி நான் பேசியது தவறு என தற்போது புரிகிறது. நான் அப்படி பேசியிருக்கக்கூடாது என பலமுறை நினைத்துள்ளேன். அதற்காக மிகவும் வருந்தினேன். அவர் நினைக்கும் அனைத்தும் கை கூட நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News