×

என்னதான் ஆர் சி பி தோத்தாலும்…  நேற்றைய போட்டியில் கோலி சிங்கிள் மேனா செஞ்ச சாதனை!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி 20 போட்டிகளில் 9000 ரன்கள் சேர்த்து சாதனை படைத்துள்ளார்.

 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி 20 போட்டிகளில் 9000 ரன்கள் சேர்த்து சாதனை படைத்துள்ளார்.

உலகின் தலைசிறந்த கிரிக்கெட்டராக இப்போது விளங்கிவரும் விராட் கோலி ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்குக் கேப்டனாக சில ஆண்டுகளாக இருந்து வருகிறார். சர்வதேசக் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தும் கோலி ஐபிஎல் தொடரில் மட்டும் அந்த அணிக்காக இன்னும் ஒரு கோப்பையை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. ஆனால் தனிப்பட்ட வீரராக கோலி மிகவும் சிறப்பாகவே ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமை அவர் வசமே உள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோலி தனது 10 ஆவது ரன்னை எடுத்த போது ஒட்டுமொத்தமாக டி 20 கிரிக்கெட் போட்டிகளில் 9000 ரன்களை சேர்த்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள ஒரே இந்தியர் கோலிதான்.

இதற்கு முன்னதாக இந்த சாதனையை கிறிஸ் கெய்ல் 13,296 ரன்களையும், கைரன் பொலார்ட் 10,370 ரன்களையும், ஷோயப் மாலிக் 9,926 ரன்களையும், பிரெண்டன் மெக்கல்லம் 9,922 ரன்களையும், டேவிட் வார்னர் 9,451 ரன்களையும் ஆரோன் பிஞ்ச் 9,148 ரன்களையும் எடுத்து முன்னிலையில் உள்ளனர். ஆனால் இவர்கள் எல்லாம் உலகம் முழுவதும் நடக்கும் பல தொடர்களில் விளையாடுகிறார்கள். கோலியோ ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News