×

திருமணமான அடுத்த நாளே இளம்பெண் தற்கொலை - பின்னணி என்ன?

திருமணமான அடுத்த நாளே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மானமதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

மானாமதுரை தாயமங்கம் சாலை அழகாபுரி நகரில் வசிப்பவர் ராமச்சந்திரன். இவரின் மகன் செல்வகுமார்(27). இவருக்கும் விருதுநகர் பாண்டியன் நகரில் வசிக்கும் சீனிவாசன் என்பவரின் மகள் சுவேதா(20) என்கிற பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை மணமகன் வீட்டின் அருகேயுள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. இதையடுத்து, மணமகன் வீட்டில் செல்வக்குமார் கட்டிய புதுவீட்டில் மணமக்கள் குடியேறினர்.

இந்நிலையில், திருமணமான அடுத்த நாளே (செவ்வாய் கிழமை) அந்த வீட்டில் இருந்த ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அப்பெண்ணின் உடலை மீட்டு உடல் ஆய்வு கூறுக்காக அனுப்பி வைத்தனர். அப்பெண் தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News