×

சின்னத்திரை லோகேஷ் பாப் நிலை என்ன? - வீடியோ வெளியிட்ட நண்பர்
 

பக்கவாதத்தால் சின்னத்திரை நடிகர் லோகேஷ் பாபுவின் உடல் நிலை தொடர்பான அப்டேட் குறித்த வீடியோவை அவரின் நண்பர் வெளியிட்டுள்ளார்.
 

சன் குழுமத்தின் ஆதித்யா சேனலை பார்ப்பவர்களுக்கு லோகேஷ் பாப்பை தெரியாமல் இருக்காது. அதன்பின் நானும் ரவுடிதான் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்து விட்டதாகவும், சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் வரை தேவைப்படுவதாக அவருடன் நடிக்கும் நடிகர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆதித்யா சேனலில் லோகோஷுடன் இணைந்து நடிக்கும் குட்டி கோபி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். சன் தொலைக்காட்சி, நண்பர்கள், காமெடி நடிகர்கள் என பலரும் அவருக்கு உதவ முன் வந்ததாகவும் தேவைக்கு மேல் அவர்களுக்கு பணம் கிடைத்து விட்டதாகவும் இனிமேல் அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் எனவும், தற்போது லோகேஷ் குணமாகி நார்மல் வார்டுக்கு மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், உதவிய அனைவருக்கும் நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News