×

என்ன தலைவரே இது?...பெரியார் புத்தகங்கள் அதிக விற்பனை - ரஜினிதான் காரணமா?

சென்னை புத்தக கண்காட்சியில் பெரியார் தொடர்பான புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.
 

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியது பெரும் சர்ச்சையாக உருவாகி கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிக்கு ஆதரவாக பாஜகவினர் மற்றும் ரஜினி ரசிகர்கள் ஒருபுறமும், பெரியார் மீது பற்றி கொண்டவர்கள் ஒருபுறமும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் பெரியார் தொடர்பான புத்தகங்கள் அதிக விற்பனை ஆகியுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.

எனவே, இதற்கு ரஜினியே காரணம் என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கிண்டலாக கூறி வருகின்றனர்..

From around the web

Trending Videos

Tamilnadu News