×

வடிவேல் பாலாஜி குடும்பத்துக்கு விஜய் டிவி என்ன செய்யப்போகுது? ரசிகர்கள் கேள்வி!

நகைச்சுவைக் கலைஞர் வடிவேலு பாலாஜியின் குடும்பத்துக்கு அவர் பணியாற்றிய விஜய் தொலைக்காட்சி உதவி செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

 

நகைச்சுவைக் கலைஞர் வடிவேலு பாலாஜியின் குடும்பத்துக்கு அவர் பணியாற்றிய விஜய் தொலைக்காட்சி உதவி செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. தொடர்ந்து விஜய் டிவியின் எல்லா நகைச்சுவை ஷோக்களிலும் அவர் கலந்து கொண்டு நடித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா லாக்டவுனால் கடந்த 6 மாதமாக அவருக்கு எந்த வேலையும் இல்லாமல் வருமானம் இன்றி இருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரது மறைவை ஒட்டி அவரது உடலுக்கு சக கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அவருடன் பணிபுரிந்த நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இந்நிலையில் அவர் நிகழ்ச்சிகள் மூலமாக பணம் சம்பாதித்த விஜய் தொலைக்காட்சியோ எந்த உதவியும் இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் நண்பரும் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் ஜட்ஜுமான சேது ‘வடிவேலு பாலாஜியின் குடும்பத்துக்கு சேனல் உதவி செய்யவேண்டும் ‘ எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News