Connect with us
mohanlal siddique

Cinema News

எந்தக் கமிட்டி அமைஞ்சி என்ன பண்ணுச்சு? இருட்டுல நடந்ததை இருட்டுல முடிங்க…!

கேரள நடிகைகளின் போராட்டத்திற்கு திலீப் நடிகை பாலியல் பலாத்காரம் விவகாரம் தான்  காரணமானது. பல நடிகைகளின் புகார்களைத் தொடர்ந்து நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிட்டது. சினிமாவுல ஹீரோ, தயாரிப்பாளர், டைரக்டர், ஒளிப்பதிவாளர் தான் முக்கியமானவர்கள்.

ஹேமா கமிட்டியில் 15 பேர் கொண்ட தாதா கும்பலின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது. அரசு அதை வெளியில் சொல்லவில்லை. மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா என்பவர் மம்முட்டி நடித்த பாலேரி மாணிக்கம் படத்தில் நடித்துள்ளார்.

அதன் டைரக்டர் ரஞ்சித் மீது நடிகை பாலியல் புகார் கொடுத்துள்ளார். அவர் கேரள சினிமா அகடமியின் தலைவர். ரேவதி சம்பத், மினு உள்பட சில நடிகைகள் நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்குற சித்திக் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளனர். அவர் வந்து தொடறதுக்கு வற்புறுத்துனார். ரூமுக்குக் கூப்பிட்டாருன்னு சொல்றாங்க.

Also read: அந்த மேட்டரில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த மோகன்லால்.. அன்றே கணித்த ஷாரூக்கான்!..

ரஞ்சித்தைப் பற்றியோ சித்திக்கைப் பற்றியோ தெரியாது. இப்படியே லிஸ்ட் பெரிசா போய்க்கிட்டு இருக்கு. தெலுங்குல கூட நடிகை விசித்ரா பிக்பாஸ்ல இருக்கும்போது எனக்கு தெலுங்கு சினிமாவுல அப்படி நடந்ததுன்னு சொன்னாங்க. ஹேமா கமிட்டில சிக்குனவங்க எல்லாரையும் தூக்குலயா போடப் போறாங்க.

Also read: கோட் படத்துல விஜயகாந்த் வர்ற சீன் அப்படி இருக்குமாமே..! அவரே சொல்லிட்டாரே..!

புகார் சொன்னது எல்லாம் ரிட்டயர்டு கேஸ் நடிகைகள். இதுக்கு நடவடிக்கை எல்லாம் இருக்காது. இந்தியாவுல இதுவரை அமைக்கப்பட்ட எந்தக் கமிஷன் ரிப்போர்ட்டுக்கும் எவனும் ஜெயிலுக்குப் போனதா சரித்திரம் கிடையாது. தேசிய அளவில் நடந்த ஊழலுக்கே யாரும் உள்ளே போகல.

இது வந்து சினிமா பிரச்சனை. இது ஒரு லாப நோக்கத்தை எதிர்பார்த்து மிரட்டல் தான். இதே போல ரஞ்சித், சித்திக் எல்லாரும் சேர்ந்து அந்த நடிகை மேல புகார் கொடுத்துருக்காங்க. அந்தப் பொண்ணு ஏறுக்குமாறா பேசுதுன்னு சொல்லிட்டாங்க.

10 நாள் போனதும் காதும் காது வச்ச மாதிரி இருட்டுல நடந்ததை இருட்டுலயே செட்டில் பண்ணிட்டா வேலை முடிஞ்சிப் போச்சு. ஹேமா கமிட்டிக்கு சுத்தியலை வச்சி ஆணி அடிச்சா மாதிரி தான். இதுல என்ன இருக்கு ஹேமா கமிட்டிக்கு? மேற்கண்ட தகவலை பத்திரிகையாளர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் நடிகர் சங்க தலைவராக இருக்கும் மோகன்லால் பெயரும் அடிபடுகிறது என கேரள பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதனால் தான் அவர் சங்கத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி தொடர்பான மேலும் விவரங்களை அறிய கீழ்க்கண்ட வீடியோ லிங்கை சொடுக்கவும்.

https://www.youtube.com/watch?v=zlSFwyoBz_8

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top