×

என்னதான் ராகுல், பண்ட் இருந்தாலும்…. தோனியை மிஸ் பன்றோம் – மனம் திறந்த இந்திய வீரர் !

இந்திய அணியில் தோனி இல்லாததால் அவரது அனுபவத்தை நாங்கள் மிஸ் செய்கிறோம் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளர்.

 

இந்திய அணியில் தோனி இல்லாததால் அவரது அனுபவத்தை நாங்கள் மிஸ் செய்கிறோம் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளர்.

தோனி இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளிலோ அல்லது உள்ளூர் போட்டிகளிலோ விளையாடி கிட்டதட்ட 7 மாதங்கள் ஆகி விட்டன. இந்திய அணியில் அவருக்கு எதிர்காலம் இல்லை என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்ட நிலையில் அவரது ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல் ஐபிஎல் போட்டிகள் தான். மார்ச் 29 ஆம் தேதி நடக்க இருக்கும் மும்பை – சென்னை ஆட்டத்துக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியில் தோனி இல்லாதது குறித்து இளம் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ‘விக்கெட் கீப்பிங்கில் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தோனியின் அனுபவத்தை அணி இழந்துள்ளது. இந்திய அணிக்காக அவர் நிறைய கொடுத்திருக்கிறார். அவரைப் போன்ற ஒரு வீரர் விளையாடாதபோது நீங்கள் அவர் இல்லாததை உணர்வீர்கள்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News