×

கேட்டவுடன் கொடுத்தார்... பாலாவுக்கு அன்பு முத்தங்கள்..  உருகும் மிஷ்கின்...

 

தமிழ் சினிமாவில் சைக்கோ உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் மிஷ்கின். வித்தியாசமான கோணத்தில் கதை, திரைக்கதை அமைப்பபதால் இவருக்கேன தனி ரசிகர் கூட்டமே உண்டு.

சைக்கோ திரைப்படத்திற்கு பின் இவர் யார் நடிக்கும் படத்தை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில், பிசாசு 2 திரைப்படத்தை அவர் இயக்கவுள்ளது தெரியவந்துள்ளது.

இப்படத்தில் ஆண்டிரியா பேயாக நடிக்கவுள்ளார். மேலும் சைக்கோ படத்தில் வில்லனாக வந்து மிரட்டிய ராஜ்குமார் பிச்சுமணி இப்படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்,  மிஷ்கின் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா.'பிசாசு 2' இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

பிசாசு படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் பாலா என்பது குறிப்பிடத்தக்கது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News