×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது தெரியுமா? - முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறவுள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
 

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவிருப்பதாக ஏற்கனவே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இதில் 10ம் வகுப்புக்கான தேர்வு இம்மாதம் 27ம் தேதி துவங்கவிருந்தது. 

ஆனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்க கடந்த 16ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. நிலைமை எப்போதும் சீராகும் என தெளிவாக தெரியவில்லை.

எனவே, 10ம் வகுப்பான பொதுத்தேர்வு தமிழ்ப்புத்தாண்டுக்குப் பின் நடத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். அதேசமயம்  11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான  பொதுத் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் முதல்வர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News