×

ஹோட்டலுக்குள் நுழைந்தாலே "அதை" திருடுவேன் - ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஜான்வி கபூர்  ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.  

 

அம்மாவின் இறப்பிற்கு பிறகு வாழ்வில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டதாக அவ்வப்போது கூறும் ஜான்வி இந்த லாக்டவுனிலும் வாழ்க்கை தனக்கு நிறைய பாடம் கற்றுக்கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த நேரத்தில் அம்மா ஸ்ரீ தேவியை அதிக மிஸ் பண்ணுவதாக கூறிய அவர் அம்மாவின் உடை மாற்றும் அறையில் இன்னும் அவரின் வாசம் வருவதாக ஏக்கத்துடன் கூறினார்.

இந்நிலையில் ஜான்வி கபூரின் நெருங்கிய தோழியும், சந்தோஷியின் மகளுமான தனிஷா, ஜான்வியை குறித்து பேட்டி ஒன்றில் பேசியபோது " ஜான்வி சிறுவயதில் தனக்கு உபயோகமே இல்லாத பொருட்களை திருடிக்கொண்டு வருவாராம். இதுகுறித்து ஜான்வி கபூர் கூறுகையில் , எந்த ஒரு ஹோட்டலுக்கு சென்றாலும். அங்கிருக்கும் மீன் மற்றும் கற்களை திருடிக்கொண்டு வந்து அதை தன் வீட்டு மீன் தொட்டிக்குள் போட்டு வைத்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News