×

அவரை பார்த்தவுடன் கட்டிபிடிச்சுக்கிட்டேன்  - ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி!

தமிழ் சினிமாவில் அதிகமான வாரிசு நடிகைகள் இருந்தாலும் வரலட்சுமி சரத்குமாருக்கு என்று தனி ஒரு இடமும் மரியாதையும் இருக்கின்றது. இதற்கு காரணம் சரத்குமாரின் மகள் என்பதையும் தாண்டி திறமையான நடிகை என்பது தான். இவருடைய துணிச்சலான நடிப்பும், வெளிப்படையான பேச்சும் அநேகரை கவர்ந்திருக்கின்றது.

 

இந்நிலையில் தற்ப்போது நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தவகையில் டேனி என்ற படத்தில் இன்ஸ்பெக்டராக வரலக்ஷ்மி நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்தது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட வரலக்ஷ்மி, " இந்த படத்தில் பிங்க் என்ற நாய் டேனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. படத்தின் ஹீரோவே டேனி தான்.  படப்பிடிப்பு தளத்தில் டேனியை பார்த்தவுடன் முதலில் போய் கட்டிப்பிடித்துவிட்டேன். நாயுடன் நடித்தது எனக்கு மிகவும் பிடித்தது.

நான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு போனாலே டேனி எப்போது வருகிறது என்று தான் கேட்டுக் கொண்டே இருப்பேன். அது தன்னுடைய காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக போய் அதன் இருக்கையில் அமர்ந்து கொள்ளும். கேமரா, படப்பிடிப்பு இதெல்லாம் டேனிக்கு தெரியவில்லை என்றாலும் நிறைய டேக் வாங்காமல் ட்ரெய்னர் சொல்வதை கேட்டு அதை சரியாக செய்துக் கொடுத்துவிடும்’ என்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News