இன்னும் இரண்டே வாரம் தானா? ஹார்ட் பீட் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் நியூஸ்!!
HeartBeat: பிரபல இணையத்தொடரான ஹார்ட்பீட் சீசன் 3 எப்போது தொடங்கும் என்ற சுவாரஸ்ய அப்டேட் இணையத்தில் கசிந்து இருக்கிறது.
மருத்துவ துறையை மையமாக வைத்து ஒளிபரப்பான வெப்சீரிஸ் ஹார்ட் பீட். ரீனா, ராக்கி, தேஜு, நவீன், குணா உள்ளிட்ட இண்டர்ன் ஆர்கே ஹாஸ்பிட்டலில் சேருகின்றனர். அங்கு அவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்ற சம்பவமே முதல் சீசனாக அமைந்தது.
முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்றாலும் அடுத்த சீசன் யாரும் எதிர்பார்க்காத அளவு வரவேற்பை பெற்றது. ரீனாவின் அம்மா ரதிக்கும் அவருடைய காதலர் அர்ஜூனுக்கு இடையே நடந்த உண்மைகள் உடைந்தது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இதில் கடைசியில் ரீனாவுக்கு நடந்த ஆபிரேஷனும் அதில் அவரை பிழைக்க வைக்க தன்னுடைய எதிர்காலத்தையே அடமானம் வைத்த அர்ஜூன் என பரபரப்பாகவே இருந்தது. அதனுடன் கோமாவுக்கு ரீனா சென்ற நிலையில் சீரிஸ் முடிவுக்கு வந்தது.
இதனால் மூன்றாவது சீசன் எப்போ என்ற கேள்வியே இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து பலருக்கு எழுந்து வந்தது. பொதுவாக இந்த சீரிஸ் வியாழக்கிழமை ஒளிபரப்பாகும். அந்த இடத்தில் தற்போது எல்பிடபுள்யூ ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்த வாரத்துடன் இந்த சீரிஸ் முடிவுக்கு வருகிறது.
இதனால் வரும் ஜூன் 25 இந்த ஹார்ட்பீட் மூன்றாவது சீசன் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷூட்டிங் தொடங்கப்பட்டு விட்ட நிலையில் இதற்கான அதிர்காரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
