kushboo 1
Kushboo: 90களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. ரஜினி,கமல், பிரபு என அனைத்து முன்னனி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த குஷ்பூ மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த குஷ்பூ முதன் முதலில் வருஷம் 16 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதற்கு முன்பாகவே ஹிந்தி, மலையாளம், தெலுங்கு , கன்னடம் என பிற மொழிகளில் நடித்து விட்டு கடைசியாகத்தான் தமிழில் அறிமுகமானார். கடைசியில் தமிழ் நாட்டின் மருமகளாகவும் மாறினார். இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூவுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: முதல் நாள் வசூலே இவ்வளவு கோடியா?!. உலக அளவில் மாஸ் காட்டும் கோட்!…
தற்போது அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இன்னொரு பக்கம் படங்களிலும் நடித்து வருகிறார். முக்கியத்துவமான கதாபாத்திரம் என்றால் மட்டுமே அந்தப் படத்தில் நடித்து வருகிறார் குஷ்பூ. இந்த நிலையில் குஷ்பூ ஒரு மேடையில் ஆடும் போது திடீரென கீழே விழுந்த சம்பவம் வீடியோவில் வைரலாகி வருகின்றது.
ஒரு தெலுங்கு விருது வழங்கும் விழாவில் மேடைக்கு அழைத்த குஷ்பூவை ஆட சொல்லியிருக்கிறார்கள். உடனே ரஜினியின் ஒரு பாட்டுக்கு குஷ்பூ ஆடும் போது திடீரென தவறி கீழே விழுந்துவிட்டார். அதை பார்த்த மேடையில் கீழே இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று பார்க்க மெதுவாக குஷ்பூ எழுந்திருக்கிறார்.
இதையும் படிங்க: அந்தப் படத்துக்குப் பிறகு வில்லன் வேடத்துல விஜய் நடிக்காததுக்கு என்ன காரணம்?
அதன் பிறகும் குஷ்பூ இதெல்லாம் சாதாரண விஷயம். அதற்காக எண்டெர்டெயின்மெண்டை நிறுத்தக் கூடாது என மீண்டும் அதே பாட்டுக்கு திரும்பவும் ஆடுகிறார்.இதை குஷ்பூவே அவருடைய இணையதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். கூடவே எந்தவொரு இடையூறு வந்தாலும் நம்முடைய பேஷனை எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் பதிவிட்டிருக்கிறார் குஷ்பூ.
இதோ அந்த வீடியோ லிங்க்:https://www.instagram.com/reel/C_j_CcTIuBW/?igsh=Z3FoOTl1MDVrYXZ1
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…