Connect with us
Senthil Rajni

Cinema News

ரஜினியைப் பார்த்ததும் அறைக்குள் மது பாட்டிலுடன் பம்மிய செந்தில்… அடுத்து நடந்ததுதான் ஹைலைட்!

காமெடி நடிகர்களில் ரொம்பவே வெகுளித்தனமானவர் செந்தில். அவர் ரஜினியின் நெருங்கிய நண்பர். இருவருக்குமான நட்பு குறித்து பிரபல சினிமா விமர்சகரும், யூடியூபருமான செய்யாறு பாலு இவ்வாறு தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

செந்தில் காமெடி நடிகர் என்பது நமக்குத் தெரியும். அவர் வெகுளித்தனமானவரும் தான் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். ஒருமுறை அவரிடம் பேசிய போது அவர் சொன்ன பதில் ரொம்பவே வெகுளித்தனமாக இருந்தது.

அவர் பேசும்போது கிராமத்துத்தனம், அப்பாவித்தனமானது. ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட்ல எந்த நாடு ஜெயிக்கும்னு கேட்டேன். அதுக்கு அமெரிக்கான்னு சொல்லிட்டாரு. அந்த நாடு கிரிக்கெட் விளையாடுமாங்கறதே அவருக்குத் தெரியல. அப்புறம் அவரு மகனே வந்து இந்தியான்னு சொல்லிட்டாரு.

இதையும் படிங்க… அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!.. ஷங்கர் கொடுத்த சரியான பதிலடி!.. எப்பவும் மறக்க மாட்டாரு!..

இவ்வளவு வெகுளியா இருக்கிறீங்களே… எப்படிங்க இவ்ளோ காலம் பீல்டுல இருக்கீங்கன்னு கேட்கும்போது ஒரு ட்ராயரைத் திறந்து உள்ளே இருந்து நிறைய செக்கை எல்லாம் வெளியே தூக்கிப் போட்டாரு. 1 லட்சம், 2 லட்ம், 3 லட்சம் மதிப்பில் அந்தக் காலத்திலேயே அதாவது 82, 83 காலகட்டத்திலேயே போட்டுக் கொடுத்த செக். அதெல்லாம் பணமில்லாம திரும்பி வந்ததாம். இன்னும் பல செக்குகளை அவர் பேங்க்ல போயி பார்க்கவே இல்லை. நேரம் இல்லாம அவ்வளவு பிசியா நடிச்சிக்கிட்டு இருந்தாராம்.

ரஜினி கூட லால்சலாம் நடிக்கும்போது ‘இந்தப் படத்துல செந்தில் இருக்காரா?’ன்னு முதல்ல ஐஸ்வர்யா ராய்க்கிட்ட கேட்டேன். இருக்காருப்பான்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. செந்தில் வந்து என் கூட நடிக்கும்போது தான் கமிட் ஆயிட்டார்னா ‘எப்போ சார் அவுட்டோர் போகப்போறோம்?’னு கேட்டுக்கிட்டே தொந்தரவு பண்ணிக்கிட்டு இருப்பாரு.

இதையும் படிங்க… சைக்கோ வேடத்தில் மிரட்டிய தமிழ் சினிமா நடிகர்கள்!.. மறக்க முடியாத ராட்சசன்!..

அவரு வந்து சரக்கு போடுவாரு. அப்படி போட்டுட்டு வீட்டுக்குப் போனா அவரோட மனைவி அவரை வாசலுக்கு வெளியவே நிப்பாட்டி வச்சிருவாங்க. தயவு தாட்சணியம் இல்லாம துரத்தி விட்டுருவாங்க. அதனால அவுட்டோர் போனா நல்லா சாப்பிடுருவாரு. அப்படித்தான் வீரா படத்துல அவுட்டோர் சூட்டிங் நடக்கும்போது நல்லா குடிச்சிட்டு என்னைப் பார்த்ததும் பம்முனாரு. அப்புறம் நானே வேற பக்கமா தள்ளி ரூமை மாத்திக்கிட்டேன் என்றாராம் ரஜினி.

மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகரும், யூடியூபருமான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top