×

அட எப்போப்பா இந்த லாக்டவுன் முடிஞ்சு தொலையும் - போர் அடிக்குதா ஓவியா?

களவாணி படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஓவியா. தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகை இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் நடித்தார். இந்த நிலையில் பிரபல தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர் இவர் ஒருவர் மட்டுமே.

 

ஓவியாவிற்கு ஆர்மி முதற்கொண்டு துவங்கினர் ரசிகர்கள்.ஆனால் அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஓவியாவிற்கு கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு வாய்ப்பையும் 90ml என்ற மோசமான படத்தில் நடித்து சம்பாதித்த நல்ல பெயரையும் கெடுத்துக்கொண்டார்.  இந்த நிலையில் தற்போது லாக்டவுனில் இருப்பதால் நடிகைகள் பலரும் தங்களது சமூகவலைதளத்தில் ஆக்ட்டீவாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஓவியா தற்ப்போது இன்ஸ்டாவில் " Paulo Coelho புக் படித்துக்கொண்டிருக்கும் போட்டோவை வெளியிட்டு " எப்போது இந்த லாக்டவுன் முடியும்..? என சலிப்புடன் கேட்டுள்ளார். இதனை கண்ட ஓவியா ஆர்மிஸ் அதையே தான் பேபி நாங்களும் கேக்குறோம் எப்போ தான் முடியும்..? இருந்தாலும் வீட்டில் பத்திரமாக இருப்பது நல்லது என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News