Connect with us
Ajith, Vijay

Cinema News

விஜய் எப்போ முதல்வரா வருவார்? ‘தல’ அஜித்தோட கணிப்பு உறுதியாகுமா?

தளபதி விஜய் அரசியலில் 2026ல் களம் காண்கிறேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது சினிமாவில் மும்முரமாக நடித்துக் கொண்டு இருக்கிறார். தளபதி 69க்குப் பிறகு முழுமையாக அரசியலில் களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் ரிசல்டையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்.

இதையும் படிங்க… ரீ ரிலீஸாகும் 3 படங்கள்!.. இப்படி பிறந்தநாள் ட்ரீட் கொடுக்கிறாரே தளபதி!.. பி ரெடி ஃபேன்ஸ்!..

அந்த வகையில் வெற்றி வாகை சூடிய சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோருக்கு மட்டும் வாழ்த்துகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளாராம். திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் காண்பதே அவரது விருப்பமாக இருக்கும்போது இந்த ரிசல்ட் அவருக்க உண்மையிலேயே அப்செட்டாக இருந்து இருக்கும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தைச் சார்ந்தோர் தெரிவித்து வருகின்றனர்.

அஜீத் தன் நண்பர்களுடன் காரில் போய்க்கொண்டு இருக்கிறார். அப்போது தன் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு இருக்கிறார். அப்போது விஜய் 2026ல் சட்டமன்றத் தேர்தலில் நின்னா எதிர்க்கட்சி தலைவராகத் தான் அமர்வார். CMமா வர மாட்டார். அதற்கு அடுத்த எலெக்ஷன்ல தான் CMமா வருவார் என்று ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்.

உங்களுக்கு அரசியல் ஆசை இல்லையான்னு நண்பர் கேட்டார். எனக்கு இந்த மாதிரி பதவி எல்லாம் தேவை இல்லை. நமக்கு வந்தா கவர்னர் பதவின்னு சொல்லி சிரிச்சாராம் தல அஜீத். அவருடன் காரில் பயணித்த நண்பர்கள் எல்லாருமே சிரித்தார்களாம். மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் தேவமணி தெரிவித்துள்ளார்.

‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் தளபதி விஜய் கட்சி ஆரம்பித்து விட்டார். அரசியலில் இறங்கியதும் முதல் வேலையாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக அளவில் கௌரவிக்கப் போகிறாராம். அது மட்டுமல்லாமல் சமீபத்தில் உலக பட்டினி தினத்தை ஒட்டி ரசிகர்கள் மூலமாக 234 தொகுதிகளிலும் அன்னதானத்தை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதையும் படிங்க… கமல் படத்துக்கு முட்டுக்கட்டையா? என்ன இது புதுத்தகவலா இருக்கே..?!

இப்படி படிப்படியாக அரசியலில் பலமான அஸ்திவாரம் அமைக்க பல வேலைகளைச் செய்து வருகிறார். ஆனால் என்ன தான் இருந்தாலும் ஒரு கருத்தை அவர் மக்கள் முன் வைக்கும் போது தான் இவர் அரசியலை எந்த அளவு புரிந்து வைத்துள்ளார் என்பது தெரியவரும் என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top