×

ஆரவ் கல்யாணத்தில் ஓவியா எங்க? யாரும் எதிர்பாராத பதிலை கூறிய சுஜா வருணி

ஆரவ் கல்யாணத்தில் ஓவியா குறித்து கூறிய சுஜா வருணி

 

2017ம் ஆண்டு தமிழில் முதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றவர் ஆரவ். பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா இவரை காதலித்து தோல்வி அடைந்தது தனிக்கதை.  ஓவியாவாலேயே ஆரவும் பிரபலமானார்.

சரண் இயக்கத்தில் மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்திலும் நடித்தார். அதன்பின் ராஜ பீமா என்கிற திரைப்படத்திலும் நடித்தார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ஜோஷ்வா படத்தில் நடித்து வரும்  ராஹி என்பவரை ஆரவ் காதலித்து வந்தார். தனக்கு ஒரு காதலி இருப்பதாக பிக்பாஸ் வீட்டில் ஆரவ் ஓவியாவிடம் கூறியது இவரைத்தான் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இவர்களின் திருமணம் இஸ்லாமிய முறைப்படி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னனிலையில் நடைபெற்றது. இதில் பிக்பாஸ் நண்பர்கள் சிலர் கலந்துகொண்டனர். இந்த புகைப்படத்தை சுஜா வருணி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து கூறினார். அதில் இணையவாசி ஒருவர் " ஓவியா எங்க? என்று கேட்டதற்கு வீட்டில் இருப்பார்" என்று அசால்ட்டாக பதிலளித்து ஆஃப் செய்துவிட்டார். இதே போல் மற்றொருவர் ஜூலி எங்க? என்றதற்கு அவர் பதில் கூட சொல்லவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News