×

வனிதா அக்கா எங்க...? அருண் விஜய் வெளியிட்ட பேமிலி போட்டோவால் கடுப்பான ரசிகர்கள்!

நடிகை வனிதா விஜயகுமார் அவரது அப்பாவுடன் ஏற்பட்ட சொத்து தகராறில் சச்சைக்குள்ளாகி பிரபலமானார். அந்த விவாகரத்தின் அடிப்படையில் தான் அவருக்கு பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து சண்டை , வாக்குவாதம் உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்டு செம பேமஸ் ஆகிவிட்டார்.

 

ஆனால், இந்த சொத்து தகராறில் இருந்தே வனிதாவை அவரது குடும்பத்தில் ஒரு நபராக யாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வனிதாவின் தம்பியும் நடிகருமான அருண் விஜய்  தனது அப்பா , அக்கா,  குழந்தைகள் என குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட இணையவாசிகள் வனிதா அக்கா எங்க ப்ரோ... அவங்க மட்டும் மிஸ்ஸிங்... இதெல்லாம் ரொம்ப பாவம் ப்ரோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.தமிழ் சினிமாவின் பெயர்போன நட்சத்திர குடும்பங்களில் ஒன்று விஜயகுமாரின் குடும்பத்தில் வனிதா, ப்ரீதா, ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் மற்றும் அருண் விஜய் என அவரது குடும்பத்தில்     உள்ள அனைவரும் பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News