Categories: Cinema News latest news

உங்களுக்கு வேற வேலையே இல்லையா.!? மீண்டும் நீதிமன்றம் வழக்கு தடை..!

விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “வீரமே வாகை சூடும்” இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்று விசாரிக்க முடியாது போல அந்த அளவுக்கு விஷால் அந்த படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி அமைத்துக் கொண்டே வந்தார்.

 

இப்படத்தின் ரிலீஸ் முதலில் டிசம்பர் என அறிவிக்கப்பட்டது. அதன், பின்னர் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு படம் ரிலீசாகும் என அறிவித்தார். பின்னர், வலிமை ரிலீஸ் தள்ளி போனது போலவே தனது படத்தின் ரிலீசை ஜனவரி 14 என அறிவித்துவிட்டு பின்னர் பிப்ரவரி 4 என அறிவித்துவிட்டார்.

தற்போது, இந்த தேதியில் ஆவது படம் ரிலீசாகும் என பார்த்தால் அதற்கும் ஆபத்து வந்துள்ளது. ஏற்கனவே லைக்கா நிறுவனத்துக்கும் விஷாலுக்கும் கடன் பிரச்சனை இருப்பதால் தற்போது லைக்கா நிறுவனம் நீதிமன்றம் சென்று உள்ளதாம்.

இதையும் படியுங்களேன்- வேண்டா வெறுப்பாய் போட்டோ எடுத்துக்கொண்ட விஜய்.! பின்னணி என்ன.?!

நீதிமன்றத்தில், வழக்கு நடை பெற்றால் அதன் தீர்ப்பு வந்த பின்பே படம் ரிலீசாகும். அதனால், வரும் 4ஆம் தேதி ரிலீசாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், விரைவில் அதற்கான அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan