×

கோலிவுட்டில் ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் சினிமாவை விட்டு நிரந்தரமாக விலகும் நடிகை?

தமிழில்  கடந்த 2006ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வந்த ரெண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யுடன்  வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழில் சூர்யா, அஜித், ரஜினிகாந்த், ஆர்யா, கார்த்தி, விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட் நடிகையாக பேரும் புகழும் பெற்றுள்ளார். ராஜம்மௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்த அனுஷ்கா உலகம் முழுக்க பேமஸ் ஆகி பலரது பேவரைட் நடிகையாக திரைத்துறையில் வளர்ந்து நிற்கிறார். தற்போது நிசப்தம் என்ற மலையாள படம் மற்றும்  ‘பாகமதி’ என்ற தெலுங்கு படம் உள்ளிட்டவற்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அனுஷ்காவின் உடல் எடையால் படவாய்ப்புகள் பறிபோனதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சினிமாவை விட்டு நிரந்தரமாக வெளியேற முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளிவந்து ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன்  கோலிவுட்டில் அவருக்கு நடந்த ஏதோ ஒரு விஷயம் அவரை மிகவும் காயப்படுத்திவிட்டதாம். இதனால் தமிழில் கிடைத்த ஒன்னு ரெண்டு வாய்ப்பையும் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News