×

எனக்கு எந்த டிரெஸ் பொருத்தமா இருக்கு? - ரசிகர்களை குழப்பிவிட்ட ஷிவானி...

 

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ, வீடியோ, டான்ஸ், சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வருகிறார்.

கவர்ச்சியை காட்டியே படவாய்ப்பும் அம்மணிக்கு கிடைத்து விட்டது. முகின் ராவ் நடிக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கப்பதாக கூறப்படுகிறது. இதனால் கண்ணா பின்னா கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார். உள்ளே போடும் பனியன் மற்றும் குட்டியூண்டு ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு செம ஹாட் போஸ் ஒருபுறமும், இடுப்பு தெரிய புடவை கட்டி மறுபுறமும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.


இந்நிலையில், 4 புகைப்படங்களை வெளியிட்டு இதில் எனக்கு எது பொருத்தமாக இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். அதில் பலரும் உங்களுக்கு புடவை பொருத்தமாக இருக்கிறது எனவும், சிலர் எல்லா உடையிலும் நீங்கள் அழகாகத்தான் இருக்கிறீர்கள் என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News