Categories: Cinema News latest news

வேட்டையனா, கூலியா எது சிறந்த படமாக இருக்கும்? கழுவுற மீனுல நழுவுற மீனா பதில் சொல்லிட்டாரே..!

வழக்கமா ஒரு நடிகருக்கு 2 படங்கள் வருதுன்னா முதல்ல வருத படத்துக்குத் தான் ஹைப் கொஞ்சம் அதிகமா இருக்கும். இரண்டாவதா வர்ற படத்துக்கு அந்தளவுக்கு இருக்காது. ஆனா ரஜினியைப் பொருத்தவரை அவருக்கு முதல்ல வர்ற படம் வேட்டையன்.

இரண்டாவதாக வரப்போற படம் கூலி. அதுவும் இந்தப் படத்துல ரஜினியோட கேரக்டர் நேம் தேவான்னு அறிவிச்சாங்க. அதை எல்லோரும் நல்லா கொண்டாடுறாங்க. வேட்டையனுக்கு அப்டேட்ஸ் ரொம்ப கம்மியா இருக்கே என்ன காரணம்னு கேட்குறாங்க. அதற்கு வலைப்பேச்சு பிஸ்மி இப்படி பதில் சொல்கிறார்.

Also read: இங்கேயும் விட்டுவைக்கலையா உலகநாயகன்… எங்க போனாலும் விதை அவர் போட்டதா தான இருக்கு!

ஜெய்பீம்கற சூப்பர்ஹிட் படத்தோட டைரக்டர் தான் த.செ.ஞானவேல். அவர் இயக்குற படம் வேட்டையன். ஆனா கூலி படத்தைப் பொருத்த வரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோன்னு பெரிய கமர்ஷியல் ஹிட்களைக் கொடுத்தவர்.

lokesh

எப்பவுமே ரசிகர்களுக்கு அதைத் தான் பிடிக்கும். அதனால அந்தப் படத்து மேல தான் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு. அவர்கள் எதிர்பார்க்குற இயக்குனர்கள் பட்டியலில் லோகேஷ் தான் இருக்காரு.

கமலை வச்சி விக்ரம் படம் கொடுத்தாரு, விஜயை வச்சி மாஸ்டர், லியோ கொடுத்தாரு. அப்படின்னா ரஜினியை வச்சி என்ன மாதிரியான படம் கொடுப்பாரு? அப்படிங்கற அடிப்படையில் இந்தப் படத்தின் மீது தான் எல்லாருக்கும் பெரிய ஹைப் இருக்கு.

அதே நேரம் வேட்டையன் கூலியை விட சிறந்த படமாகக் கூட இருக்கலாம். ஆனால் லைகா தரப்பில் ஒரு சுணக்கம் தெரிகிறது. இந்தியன் 2 படத்துல பட்ட அடி கூட அதுக்குக் காரணமா இருக்கலாம். அதனால தான் அந்தப் படத்துக்கு ஹைப் இல்லாம இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வேட்டையன் படத்தை லைகா நிறுவனமும், கூலி படத்தை சன் பிக்சர்ஸ்சும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபர் 10ல் வேட்டையன் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான அப்டேட்டுகள் கம்மியாக இருப்பதால் தான் இந்த கேள்வி எழுந்துள்ளது.

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v