×

நாம் இங்கு திரௌபதி பார்த்துக் கொண்டு இருக்கும் போது…. கேரள அரசின் தரமான முயற்சி !

சாதி மறுப்புத் திருமணம் செய்வதால் சொந்தக் காரர்கள் மற்றும் சாதி வெறியாளர்களால் பாதிக்கப்படும் தம்பதிகளுக்கு பாதுகாப்பு இல்லங்கள் அமைக்க கேரள அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

 

சாதி மறுப்புத் திருமணம் செய்வதால் சொந்தக் காரர்கள் மற்றும் சாதி வெறியாளர்களால் பாதிக்கப்படும் தம்பதிகளுக்கு பாதுகாப்பு இல்லங்கள் அமைக்க கேரள அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

சாதி மற்றும் மதம் மாறி காதலித்து கலப்பு திருமணங்கள் இந்தியா முழுவதும் சாதி வெறியர்களாலும், சொந்தக்காரர்களாலும் தாக்குதல் மற்றும் கொலை என பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றைத் தடுப்பதற்காக கேரள அரசின் சமூக நீதித்துறை ஒரு முன்மாதிரி முயற்சியை எடுத்துள்ளனர்.

இதுபோல சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்காக அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த இல்லங்களில் ஓராண்டு வரை அவர்கள் தங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் இதுபோன்ற ஒரு சமூக நீதி முன்னெடுப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில்தான் நம்மூரில் திரௌபதி எனும் திரைப்படம் வெளியாகி நாடகக் காதல் என்ற பெயரில் காதல் திருமணங்களையும் பதிவுத் திருமணங்களையும் கொச்சைப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News