’விசில்’ ஹீரோ விக்ரமாதித்யாவை மறக்க முடியுமா?.. இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க!
விஜய்க்கு முன்னதாகவே ”விசில் அடிக்கும் மதனா மதனா” என விசில் படத்தில் நடித்தவரே நடிகர் விக்ரமாதித்யா தான். பல ஆண்டுகள் ஆள் அட்ரஸே இல்லாமல் இருந்த அவரை பற்றிய சில தகவல்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
இயக்குநர்கள் ஜே.டி, ஜெரி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான ‘விசில்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த விக்ரமாதித்யா அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
‘விசில்’ திரைப்படம், ஹாலிவுட் படமான அர்பன் லெஜண்ட் என்பதன் ரீமேக்காக உருவாக்கப்பட்டது. இப்படத்தில் காயாத்திரி ரகுராம், செரின், திவ்யதர்ஷினி அதாங்க நம்ம டிடி நீலகண்டன், விவேக், லிவிங்ஸ்டன், செந்தில், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முக்கோணக் காதல், திகில் மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்து உருவான இந்த படம், டி.இமான் இசையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விக்ரமாதித்யா, தனது கவர்ச்சியான தோற்றத்தாலும் நடிப்பாலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இருப்பினும், பின்னர் அவருக்கு எதிர்பார்த்த அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால், திரைப்படத்துறையில் இருந்து படிப்படியாக விலகினார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள அவரது சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இன்றளவும் ‘விசில்’ படத்தில் பார்த்த அதே இளமையும் அழகும் மாறாமல் திகழ்வது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
