×

வெள்ளை தங்கம்... வாட்ச் முழுக்க வைரக்கல் - நடிகையின் கணவர் கை இத்தனை கோடி மதிப்பா..!  

நட்சத்திர பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தெரிந்துகொள்வதில் அவரது ரசிகர்கள் அதிக ஆர்வம் கொள்வர்  அந்தவகையில் தற்போது பிரியங்கா சோப்ராவின் கணவர்  நிக் ஜோன்ஸ் அணிந்துள்ள வாட்ச்சின்   மதிப்பு குறித்து பல்வேறு விதமான வதந்திகள் வெளிவந்துள்ளது. வைரக்கல் பதிக்கப்பட்ட அந்த வாட்ச் முழுக்க முழுக்க வெள்ளை தங்கத்தால் ஆனது எனவும் இதன் விலை  ரூ. 7.5 கோடி எனவும் கூறப்படுகிறது. உலகில் உள்ள மிக விலையுயர்ந்த கை கடிகாரங்களில் ஒன்றானதாக சொல்லப்படுகிறது.

 

உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதல் கணவருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இடையிடையே அவருடன் எடுத்துக்கொள்ளும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது  சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். தற்போது இந்த வாட்ச் தகவல் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News