விஜய் - அஜித் இடத்தை பிடிக்க போவது யார்? சரியா கணிச்சு சொல்லிட்டாரே
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இவர்களுக்கு அடுத்தபடியாக யாருமே அசைக்க முடியாத இரு பெரும் தூண்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். 30 வருடங்களாக இவர்கள் சினிமாவில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார்கள். ரசிகர்கள் படைபலமும் அதிகம். இவர்களின் படங்கள்தான் தமிழ் சினிமாவிற்கு தீணி. வசூலில் வேட்டையாடி வருகின்றன. இவர்கள் படங்களுக்கு ஒப்பனிங் என்பது எப்பொழுதுமே பெரிய அளவில்தான் இருக்கும்.
இவர்களின் ஒவ்வொரு புது படங்களின் ரிலீஸ் சமயத்தில் திருவிழாக்காலம் போலத்தான் இருக்கும். இன்னும் இருந்து வருகின்றன. அதில் விஜய் சினிமாவிற்கு டாட்டா காட்டி விட்டு அரசியல் செய்ய போகிறேன் என கிளம்பி விட்டார். அவர் நடித்த ஜனநாயகன் திரைப்படம்தான் விஜய்க்கு கடைசி திரைப்படமாகும். அதன் பிறகு மூழு மூச்சாக அரசியல் வாழ்க்கைதான் வாழப் போகிறேன் என அறிவித்துவிட்டார்.
இதுவே வினியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பெரும் அதிருப்தி. ஏனெனில் விஜய் படங்கள்தான் அவர்களுக்கு பெரிய அளவில் லாபத்தை கொடுத்து வந்தன. விஜய் இனிமேல் படம் நடிக்க வில்லை என்றால் எங்களின் கதி அதோகதிதான் என புலம்பி வருகின்றனர். இன்னொரு பக்கம் அஜித்தும் கார் ரேஸில் ஆர்வமாக இருந்து வருகிறார். தற்போது கூட ரேஸில்தான் இருக்கிறார்.
அக்டோபர் மாதத்திற்கு பிறகு அவரின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் கார் ரேஸ் டிசம்பர் வரை இருக்கும் என சமீபத்தில் ஒரு தகவல் கிடைத்தது. அப்போது அஜித்தும் அவ்ளோதானா என்று அனைவருமே கேள்வி எழுப்பி வருகின்றனர். இருந்தாலும் எதிர்காலத்தில் அஜித்திடம் இருந்தும் சினிமாவில் ஓய்வு எடுக்க போகிறேன் என அறிவிப்பு வரலாம் என்று சொல்லப்படுகிறது.

சினிமா, குடும்பம் இவை எல்லாவற்றையும் தாண்டி அவருக்கு அவருடைய பேஷனான ரேஸ் மீதுதான் அதீத காதல் .அதனால் தன்னுடைய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஏதாவது ஒன்றை செய்ய ஆரம்பிப்பார் என்று தெரிகிறது. இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரெங்கநாதனிடம் சமீபத்தில் ‘விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக சினிமாவில் ஒரு கேப் ஏற்படும். அந்த இடைவெளியை யாரால் நிரப்ப முடியு?’ என்ற கேள்வியை நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பிரதீப் ‘அவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. யாராலும் அவர்கள் இடத்தை ஈடுசெய்ய முடியாது. 30 வருட சாதனைக்கு பிறகு அவர்கள் இந்த இடத்தை அடைந்திருக்கின்றனர். ரஜினி சார், விஜய் சார், அஜித் சார் படங்களின் திரைக்கதை எதுவாக இருந்தாலும் மக்கள் அதை வெற்றிபெற செய்வார்கள். ஒரு வேளை 30 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் நிலையை யார் அடைய முடியும் என தெரியவரும். அதுவும் மக்கள் கைகளில்தான் இருக்கின்றது ’ என கூறினார் பிரதீப்.
