×

மீண்டும் காதலில் விழுந்த ஓவியா - உருக வைக்கும் பதிவு யாருக்கு?

களவாணி படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஓவியா. தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகை இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் நடித்தார். இந்த நிலையில் பிரபல தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர் இவர் ஒருவர் மட்டுமே.

 

ஓவியாவிற்கு ஆர்மி முதற்கொண்டு துவங்கினர் ரசிகர்கள்.ஆனால் அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஓவியாவிற்கு கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு வாய்ப்பையும் 90ml என்ற மோசமான படத்தில் நடித்து சம்பாதித்த நல்ல பெயரையும் கெடுத்துக்கொண்டார்.  இந்த நிலையில் தற்போது லாக்டவுனில் இருப்பதால் நடிகைகள் பலரும் தங்களது சமூகவலைதளத்தில் ஆக்ட்டீவாக இருந்து வருகின்றனர்.

அந்தவகையில் ஓவியா தற்ப்போது தனது ட்விட்டர் பக்கத்தில், காதலில் உருகி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் " நாம் நேசிப்பவர்கள் ஒருபோதும் நம்ம விட்டு விலகிப்போவதில்லை. அவர்கள் எப்போதும் நம் அருகில் தான் இருகிறார்கள். நம்மை பார்க்காமல் இருந்தால் கூட மிகுந்த அன்புடன் தொடர்ந்து நேசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்." என்று கூறி பதிவிட்டுள்ளார். இதை பார்க்கும்போது நிச்சயம் ஆரவ்வை நினைத்து தான் உருகுகிறார் என்று பச்சையாக தெரிகிறது என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News