நடிகை சொன்ன பாலியல் புகார்!.. பின்னணியில் இருப்பது யார்?!.. பரபர அப்டேட்!...
சீரியல் நடிகை மான்யா ஆனந்த் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் குறித்து பேசிய பேட்டி தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் உலகில் காஸ்ட்டிங் கவுச் என சொல்லப்படும் ‘வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வா’ என்கிற புகாரைத்தான் மான்யா ஆனந்த் பேசியிருக்கிறார்.
தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் தன்னை அணுகி ‘தனுஷ் இயக்கி நடிக்கவுளள ஒரு புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன். அதற்கு நீங்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்’ எனக் கேட்டதாகவும், அதற்கு தான் மறுத்து விட்டதாகவும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து பல ஆங்கில இணையதளங்களும், பல தமிழ் இணையதளங்கள் மற்றும் ஊடகங்களும் இதை செய்திகளாக இன்று வெளியிட்டன. தனுஷ் மீது ஏற்கனவே நெகட்டிவ் இமேஜ் இருக்கும் பொழுது இந்த செய்தியை பலரும் நம்பி சமூக வலைத்தளங்களில் பகிர துவங்கி விட்டார்கள். ஆனால் இது உண்மையில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
8 மாதங்களுக்கு முன்பு தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பெயரில் ஒரு நபர் சின்ன சின்ன நடிகைகளிடம் தொடர்பு கொண்டு தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்து அவரிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது. அப்போது ஸ்ரேயாஸ் தரப்பில் ‘இது நான் இல்லை இது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளிக்கவுள்ளோம்’ என கூறியிருந்தார்.

பலரிடம் வேலையை காட்டிய அந்த குறிப்பிட்ட நபர்தான் மான்யா ஆனந்திடமும் பேசியிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. தற்போது மான்யாவின் வீடியோ வைரலாகி இது செய்தியாக மாறிவிட்டதால் தற்போது ஸ்ரேயாஸ் தரப்பும் இதை சீரியசாக அணுக துவங்கியிருக்கிறார்கள். சைபர் கிரைம் மூலம் அந்த நபர் யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அந்த நபர் கேரளாவை சேர்ந்தவர் என்றும் வாரத்தில் இரண்டு நாட்கள் சென்னை வந்து தனது கைவரிசையை காட்டுவதாகவும் தற்போது தெரிய வந்திருக்கிறது. அவரை காவல்துறை நெருங்கிவிட்டதாகவும் விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவார் எனவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.
