×

ஒரே நாளில் வெளியான ரஜினி-கமல் படங்கள் 
வெற்றிக்கொடி கட்டியது யார்?

 
rajnikamal

அந்தக்காலகட்டத்தில் ரஜினி கமல் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு செம விருந்து தான். இருதரப்பினரும் ஒரே பரபரப்பாகி விடுவர். எப்போது தலைவர் படம் ரிலீஸ் ஆகும் என்று ஆவல் பொங்கும் நாள் முதல் படம் வெளியாகும் நாளையொட்டி திரையரங்கை அலங்கரிப்பதிலும், கட் அவுட், பேனர் கட்டுவதில் யார் உயரம் அதிகமாக வைக்கிறார்கள் என்ற போட்டியும் திரையரங்கே திருவிழா போல் காட்சியளிக்கும். இதில் ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி சண்டை எல்லாம் நடந்துள்ளது. ரசிகர்கள் எப்படி இருக்கிறார்களோ அதற்கு நேர் மாறாக கமலும், ரஜினியும் இருப்பார்கள். இருவரும் இன்று வரை சிறந்த நண்பர்கள். இருவருக்கும் இடையே தொழிலில் மட்டுமே ஆரோக்கியமான போட்டி உண்டு. 

மற்ற விஷயங்களில் இருவரும் அடிக்கடி நட்பு பாராட்டி பேசிக்கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் மறக்காமல் சொல்வதுண்டு. ரஜினி படங்களைப் பொறுத்தவரை பொதுவாக என் மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்...என்பதைப் போல் பட்டையைக் கிளப்பி வெற்றி கொடி நாட்டியுள்ளது. ஆனாலும் அவார்டுக்கு என்று சொன்னால் அது கமல் படங்களையே போய்ச் சேரும். அது உங்களுக்கே தெரியும். என்னதான் இருந்தாலும், கமல் ரஜினி ரசிகர்களிடையே படங்கள் வெளியானதன் பின் இருதரப்பினரும் சந்திக்கும்போது நடக்கும் விவாதம் இருக்கே...அடேங்கப்பா...அதைக்கேட்க கேட்க சுவாரசியமாகத்தான் இருக்கும். இருவரும் தங்களுக்கு சாதகமான பாயிண்டை தேடித் தேடிக் கண்டுபிடித்து சொல்வார்கள். அந்தக்காலகட்டம் அவ்வளவு இனிமையானது. 

சினிமாவில் கமல் ரஜினிக்கு சீனியர் என்றாலும் சமகாலங்களில் இருவரும்  போட்டியாளர்கள். ஆரம்பத்தில் இருவரும் இணைந்தே பல படங்கள் நடித்தனர். அதில் 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களைச் சொல்லலாம். இருவரும்
வளர்ந்து வந்த காலகட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து தனித்தனியாக நடித்தால் தான் சம்பாதிக்க முடியும் என்று கலந்து பேசி அதன்படி நடித்தனர். 1974ல் கமல் கதாநாயகனாக நடித்தார்.1978ல் ரஜினி கதாநாயகனாக நடித்தார். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் 16 வயதினிலே. 

அப்போது இருவரது படங்களும் ஹிட் ஆக ஓடி நல்ல வசூல் பார்த்தன. 1983ல் தான் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகின.

அப்படி வெளியான படங்கள் தான் கமல் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே படமும், ரஜனி நடித்த தங்கமகன் படமும். இதில் கமல் படம் 175 நாள்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. தங்கமகன் 100 நாள் ஓடியது. 1984 தீபாவளியன்று ரஜினிக்கு நல்லவனுக்கு நல்லவன் படமும், கமலுக்கு எனக்குள் ஒருவன் படமும் ரிலீஸானது. இதில் ரஜினி படம் 150 நாள்கள் ஓடியது. கமல் படம் 100 நாள்கள் ஓடியது. 1985 தமிழ்புத்தாண்டு அன்று கமலின் காக்கிசட்டை படமும், ரஜினியின் நான் சிகப்பு மனிதன் 100 நாள்கள் ஓடின. இதில் கமல் படம் பட்டையை கிளப்பி 175 நாள்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. 1986ல் தீபாவளிக்கு மறுபடியும் ரஜினி கமல் படங்கள் மோதின. இதில் கமலுக்கு ஜப்பானில் கல்யாணராமன் படமும், ரஜினிக்கு படிக்காதவன் படமும் ரிலீஸானது. இதில் கமலின் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. ஏனெனில் அவரது கல்யாணராமன் படம் செம ஹிட் ஆகியிருந்தது. இதன் 2ம் பாகமாகவே இந்தப்படம் இருந்ததால் அத்தகைய எதிர்பார்;ப்பு இருந்தது. ஆனால், ரஜினி படம் தான் செம ஹிட் ஆகியது. படிக்காதவன் படம் 235 நாள்கள் ஓடி மகத்தான சாதனை படைத்தது. கமல் படம் சுமாராகவே ஓடியது.

1987 தீபாவளியன்று ரஜினி கமல் படங்கள் மோதின. இதில் ரஜினியின் சொந்தப்படமான மாவீரன் படமும், கமலுக்கு பாலசந்தரின் தயாரிப்பான புன்னகை மன்னன் படமும் மோதின. இதில் மாவீரன் படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தபோதும், படம் ப்ளாப் ஆனது. கமலின் புன்னகை மன்னன் படம் பிளாக் பஸ்டர் மூவியாகி 175 நாள்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. அதே ஆண்டில் வெளியான ரஜினியின் மனிதன் படமும், கமலின் நாயகன் படமும் சம அளவில் வெற்றி பெற்றது. இருவரது படங்களும் வெள்ளி விழா கண்டன. 

1989-ல் தீபாவளியன்று கமலுக்கு வெற்றி விழா என்ற த்;ரில்லர் படமும், ரஜினிக்கு மாப்பிள்ளை என்ற தெலுங்கு ரீமேக் படமும் ரிலீஸானது. இதில் மாப்பிள்ளைக்குத் தான் வெற்றி. இது 200 நாள் ஓடியது. ஆனால் கமலின் வெற்றி விழா 100 நாள் ஓடியது. 1990 பொங்கல் அன்று ரஜினிக்கு லாவாரிஸ் என்ற இந்திப்படம் பணக்காரன் என தமிழில் ரீமேக் ஆனது. இதில் கமலுக்கு அவரது தெலுங்கு படமான இந்திரடு சந்திரடு படம் தமிழில் ரீமேக்காகி இந்திரன் சந்திரன் என்ற பெயரில் வெளியானது. இதில் ரஜினியின் பணக்காரன் படம் தான் சக்கை போடு போட்டது. இதில் ரஜினி ப்ளாக் பஸ்டர் ஹீரோவானார். அவரது படம் 200 நாள்கள் ஓடியது. கமல் படம் 100 நாள்கள் ஓடியது. 

1991 தீபாவளியன்று ரஜினிக்கு தளபதியும், கமலுக்கு குணா படமும் ரிலீஸானது. இதில் ரஜினியின் படம் 150 நாள்கள் ஓடியது. கமலின் படம் அன்றைய காலகட்டத்தில் யாரும் அவரது உன்னதமான நடிப்பை ரசிக்காததால் படம் ப்ளாப் ஆனது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் குணாவை யாராலும் அடிச்சிக்கவே முடியாது. அந்தப்படம் கமலின் நடிப்புக்கு ஒரு மணிமகுட

; என்கிறார்கள். 1992-ல் கமலுக்கு தேவர் மகன் படமும், ரஜினிக்கு பாண்டியன் படமும் வெளியானது. கமல் படம் தமிழகம் எங்கும் பல திரையரங்குகளில் 150 நாள்களை கடந்து வெள்ளி விழா ஓடியது. ரஜினி படம் காலை காட்சி மட்டும் ஓடி 100 நாள்கள் ஓடியது. இதன்பின்னர் இருவரது படங்களின் நேரடி போட்டி 3 வருடத்திற்கு இல்லாமல் போனது. ஆனால்1995 பொங்கலுக்கு இருவரது படங்களும் நேருக்கு நேர் மோதின. ரஜினியோட பாட்ஷா படமும், கமலின் சதிலீலாவதி படமும் வெளியானது. இதில் ரஜினியின் பாட்ஷா படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகி பல தியேட்டர்களில் 200 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. சின்ன பட்ஜெட்ல எடுக்கப்பட்ட சதிலீலாவதி படம் காலைக்காட்சிகள் மட்டும் ஓடி 100 நாள்களைக் கடந்து வெற்றி பெற்றது. 

அதே ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் முத்து படமும், கமலின் குருதிப்புனல் படமும் களத்தில் இறங்கின. இதில் ரஜினியின் முத்து படம் பெரிய ஹிட் ஆகி 150 நாள்களைக் கடந்து வெற்றி பெற்றது. கமலின் படம் பெரிய த்ரில்லர் ஸ்டோரியாக இருந்தாலும், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சென்னையில் மட்டும் 100 நாள்கள் ஓடியது. இதன்பிறகு இருவரது படங்களும் நேருக்கு நேர் மோதவில்லை. அதன்பின்னர் 10 ஆண்டுகள் கழித்து 2005ல் தமிழ்புத்தாண்டு அன்று தான் இருவரது படங்களும் மோதின. இதில் ரஜினிக்கு சந்திரமுகி, கமலுக்கு மும்பை எக்ஸ்பிரஸ் படம் வெளியானது. இதில் சந்திரமுகியை சொல்லவே தேவையில்லை. பல திரையரங்குகளில் 100 நாள்களும், சென்னையில் மட்டும் 784 நாள்களும் ஓடி சாதனை புரிந்தது. மும்பை எக்ஸ்பிரஸ் படுதோல்வியை அடைந்தது. இருவரது படங்களும் ஒரே நாளில் போட்டியாக வெளியாகியவை 12. இதில் பெரும்பாலும் ரஜினியின் படங்களே அதிகளவில் ஓடி சாதனை புரிந்துள்ளன. 

From around the web

Trending Videos

Tamilnadu News