×

இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் அப்டேட்

 

தமிழில் பிக்பாஸ் சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்னர். நிகழ்ச்சி துவங்கி 10 நாட்கள் கடந்து விட்ட நிலையில் தற்போதுதான் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

இந்நிலையில், இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் ஆஜித், கேப்ரியல்லா, ரம்யா பாண்டியன், ரேகா, சம்யுக்தா, சனம், ஷிவானி ஆகியோர் உள்ளனர்.

இதில், ஆஜித், கேப்ரியல்லா மிகவும் சிறு வயது என்பதால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் எனத்தெரிகிறது.  சனம் ஷெட்டி அடிக்கடி சண்டை போட்டு வருவதால் அவரை அனுப்ப வாய்ப்பில்லை. அதேபோல், ஷிவானி, ரம்யா பாண்டியன் ஆகியோரை அனுப்ப வாய்ப்பில்லை. மீதமிருப்பது சம்யுக்தா மற்றும் நடிகை ரேகா மட்டுமே. 

இதில், ரேகா பிரபல நடிகை என்பதால் அவரை அனுப்பாமல் சம்யுக்தாவை அனுப்ப வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், அவரால் சண்டை சச்சரவுகளும் ஏற்படவில்லை. சுவாரஷ்யமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News