Categories: Cinema News latest news

நயனின் மூக்குத்தி அம்மன்2 படத்தினை இயக்க போகும் பிரபல இயக்குனர்… வெவரம்தான்!

Mookuthi Amman2:நயன்தாரா நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் அப்டேட் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வந்த நயன்தாராவுக்கு திருஷ்டி பட்டுவிட்டதோ என்னவோ? திருமணத்திற்கு பின்னர் அவர் நடிப்பில் வெளியான எந்த ஒரு திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் வரை கிட்டத்தட்ட 12 படங்கள் நயன்தாராவின் கேரியரில் பிளாப் கணக்கில் சேர்ந்திருக்கிறது.

இதனால் தன்னுடைய கவனத்தை பிசினஸ் பக்கம் திருப்பினாலும் மீண்டும் தான் விட்ட இடத்தை பிடிப்பதற்காக நான் பல வழிகளில் முயன்று வருகிறார். அப்படி அவரின் முக்கிய ஸ்கெட்ச் ஆன ஒன்றுதான் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். இப்படத்தின் முதல் பாகத்தில் நயன் அம்மனாக நடித்திருப்பார்.

ஆர் ஜே பாலாஜி மற்றும் சரவணன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நேரத்தில்தான் ஆர்.ஜேபாலாஜி இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகளை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

அந்த நேரத்தில் அவசர அவசரமாக வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா நடிப்பதாக  ஃபர்ஸ்ட் லுக்குடன் அறிவிப்பு வெளியானது. ஆனால் ஆச்சரியமாக அப்படத்தின் இயக்குனர் குறித்த எந்த தகவல்களும் அதில் இடம்பெறவில்லை. இதைத்தொடர்ந்து, ஆர்ஜே பாலாஜி மாசாணி அம்மன் என்ற பெயரில் திரிஷாவை வைத்து தன்னுடைய படத்தை உருவாக்க இருப்பதாக  திட்டமிட்டு இருக்கிறார்.

இந்த கூட்டணி வலுவானது என்பதால் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை வெற்றியடைய வைக்க இயக்குனர் சுந்தர்.சியை இயக்க அழைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சுந்தர்.சியுடன் பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily