Salim Ghouse: மிரட்டும் குரல்; மிரள வைக்கும் நடிப்பு- மறக்க முடியுமா சலீம் கௌஸ்

 
Salim Ghouse: மிரட்டும் குரல்; மிரள வைக்கும் நடிப்பு- மறக்க முடியுமா சலீம் கௌஸ்

1989ல் வெளியான வெற்றிவிழா படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் சலீம் கௌஸ். முதல் படத்திலேயே இவர் ஏற்ற ஜிந்தா வேடம் யார் இவர் என அனைவரை பேச வைத்தது. இவரது மிரட்டும் குரல் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. சலீம் கௌஸை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றது விஜயகாந்த் நடித்த சின்ன கவுணடர் படமே. இதில் அவர் ஏற்ற சக்கரை கவுண்டர் வேடம் மிக பிரபலமாகும். நீ நேர்மையை தவசிகிட்ட காட்டு விசுவாசத்த எங்கிட்ட காட்டு என்ற வசனம் அப்போதே மிக பிரபலம்.

சென்னையில் பிறந்த அவர் ஒரு சிறந்த மேடை நாடகக் கலைஞர் மற்றும் தற்காப்புக் கலை நிபுணர் என்பதும் இவரது சிறப்பு. 1978-ல் 'ஸ்வர்க் நரக்' என்ற ஹிந்தித் திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தைத் தொடங்கிய சலீம் கௌஸ், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் எனப் பல மொழிகளில் முத்திரை பதித்தார். ஆனாலும் தமிழில் குறிப்பிட்ட சில படங்களே நடித்தார்.

Salim Ghouse: மிரட்டும் குரல்; மிரள வைக்கும் நடிப்பு- மறக்க முடியுமா சலீம் கௌஸ்

தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் 'டி.டி' என்ற கதாபாத்திரத்தில் கொள்ளையனாக வந்து கலக்கினார். இறுதியாக விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம் என்ற நடித்திருந்தார். அதில் அவர் பேசும் வேதநாயகனாலே பயம் என்ற வசனம் மூலம் தன்னை மீண்டும் நிருபித்தார்.

மலையாள சினிமாவில் மோகன்லாலுடன் அவர் நடித்த தாழ்வாரம் என்ற படத்தில் ராஜு என்ற கொடூரமான அதே சமயம் பயந்த சுபாவம் கொண்ட வில்லனாக அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. சலீம் கௌஸ் தனது 70-வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் வில்லன்களுக்கு ஒரு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர்களில் சலீம் கௌஸிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு.

From Around the web