×

சந்திரமுகி 2 ஹீரோயின் யார்? ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது உருவாக இருக்கிறது. அந்த படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். வடிவேலுவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

 

அண்மையில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கவில்லை என்றும் அவருக்குப் பதில் சிம்ரன் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த செய்தி முற்றிலும் என்று ட்விட்டரில் சிம்ரன் தெரிவித்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதேபோல் நடிகை ஜோதிகாவும் சந்திரமுகி 2  படத்தில் நடிப்பது குறித்து தன்னை அணுகவில்லை என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதையடுத்து ஜோதிகா நடித்த ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை கியாரா அத்வானி நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி தீயாக பரவியது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து தெளிவான விளக்கம் கொடுத்தவுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,

"சந்திரமுகி 2 படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்து தொடர்ந்து பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. ஜோதிகா மேடம், சிம்ரன் மேடம், அல்லது கியாரா அத்வானி இதில் ஹீரோயின் ரோலில் நடிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால் அது அத்தனையும் பொய்யான செய்தி. தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் நடந்து வருகிறது. கொரோனா பிரச்சனை முடிந்து பிறகு, தயாரிப்பு நிறுவனம் ஹீரோயினை உறுதி செய்த பிறகு அதிகாரப்பூர்வமாக லீட் ரோலில் நடிக்கும் நடிகை குறித்து அறிவிப்போம்" என விளக்கம் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News