Categories: Cinema News latest news

நயன்தாரா, தனுஷ் பிரச்சனைக்கு முக்கிய காரணமே அவர் தானா? யாரைச் சொல்றாரு பிரபலம்?

நயன்தாரா, தனுஷ் விவகாரத்துல முக்கிய புள்ளியே விக்னேஷ் சிவன் தான் என்று ரசிகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். இது உண்மையா என பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.

3 செகண்ட் வீடியோவுக்கு 10 கோடி ரூபாயான்னு சொல்லிட்டு அது ஆவணப்படமா, கல்யாண கேசட்டான்னு தெரியல. அதை நெட்பிளிக்ஸ்ல ரிலீஸ் பண்ணியாச்சு. அதுக்கு பின்னாடி நானும் ரௌடிதான் படத்துல இருந்து 23 செகண்ட் காட்சிகள் வந்தது. இதுக்கு தனுஷ் ஏன் மவுனமா இருக்காரு? எதுவுமே சொல்ல மாட்டாரான்னு கேள்வி கேட்டாங்க. வழக்கு தொடர மாட்டாங்களான்னு கேட்டாங்க. நேத்து நீதிமன்றத்துல தனுஷ் வழக்கு தொடர்ந்தாரு. அதுக்கு நயன்தாரா தரப்புல பதில் அளிக்க உத்தரவும் வந்துடுச்சு.

Also read: லப்பர் பந்து பட நடிகை தட்டி தூக்கிய ஆர்.ஜே பாலாஜி.. அப்போ திரிஷா?.. இது என்ன டுவிஸ்ட்டு..!

இது சினிமாவுல உள்ள கன்டன்ட். நிச்சயமா கார்ப்பரேட் பிரச்சனை வரும்னு தெரியும். இதை நயன்தாரா வேணும்னே பண்ணிருக்காங்களா? இல்ல அவங்க என்ஓசி கேட்டவிதம் சரியில்லையா? கொடுக்கலைன்னா கடந்து போயிக்கிட்டே இருக்க வேண்டியது தானே. ஆவணப்படம்னதும் முதல்ல பயங்கர பில்டப்லாம் கொடுத்தாங்க.

ஆனா அதுல ஒண்ணுமே இல்லை. இதுல ஒண்ணும் கிடையாது. மாத்தி மாத்திப் பேசிக்கிறாங்க. இதுல நானும் ரௌடிதான் கிளிப்பிங்ஸ் இல்லாமலேயே அதை வெளியிட்டுருக்கலாம். இது ஏதோ தனுஷூக்கும், நயன்தாராவுக்கும் உள்ள முன்பகை மாதிரி தெரியுது.

dhanush nayanthara

இந்த விஷயம் கோர்ட்டுக்கு வந்துருக்கு. என்ன ஆகுதுன்னு பார்ப்போம். இப்ப ஒரு விஷயம் என்ஓசி கேட்குறேன்னா விருப்பம் இருக்கு. இல்லன்னு ரெண்டு தான் இருக்கு. பதில் சொல்லலன்னா விருப்பம் இல்லன்னு தான் அர்த்தம். திரும்ப திரும்ப தொந்தரவு பண்ணக்கூடாது. கன்டன்ட் அவங்க இது. அது தரலன்ற போது கடந்து போயிடணும். இந்த 3 பக்க அறிக்கை வந்து நயன்தாரா தனுஷ் மேல வன்மத்தோடு எழுதுன மாதிரி தான் இருக்கு.

சொன்ன மாதிரி அவங்களுக்குள்ள என்ன பிரச்சனை இருந்துருக்கு? ஒருகாலத்துல நண்பர்களாக இருந்துருக்காங்க. எதிர்நீச்சல் படத்துல சம்பளமே வாங்காம நடிச்சிருக்காங்க. சிவகார்த்திகேயன் வளர்ந்து வர்ற கால கட்டம் அது. அதனால அந்தப் படத்துக்கு பப்ளிசிட்டிக்காக நயன்தாரா ப்ரீயா பண்ணிக் கொடுத்துருக்காரு. ஆனா அவங்களுக்குள்ள முன்பகை இருந்துருக்கலாம் என்கிறார் செய்யாறு பாலு.

ஆனா ஆடியன்ஸ் சைடுல இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் விக்னேஷ் சிவன்தான்னு சொல்லப்படுதுன்னு கேள்வி கேட்குறாங்க. அதுக்கு செய்யாறு பாலு சொல்ற பதில் இதுதான். அந்த அறிக்கையே விக்னேஷ் சிவன் எழுதுன மாதிரி தான் இருக்கு.

தெள்ளத்தெளிவா எழுதுனாருன்னா அது விக்னேஷ் சிவனோட ஐடியா தான். இப்படி இது நமக்கு வேணும். இது வேணாம்கறதை நயன்தாராவ வச்சி அப்ளை பண்ணிருக்காருன்னு நினைக்கிறேன். நிச்சயமா விக்னேஷ் சிவனோட தலையீடு இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v