×

மோகன் வைத்தியாவுக்கு பதிலா இவரா?... களை கட்டப்போகும் பிக்பாஸ் 
 

 

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது.  பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் டிக்டாக் பிரபலம்  இலக்கியா மற்றும் நடிகை ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி புகழ், வித்யு லேகா ராமன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக தகவல் கசிந்தது.

ஆனால், தற்போது ரம்யா பாண்டியன், விஜய் டிவி புகழ் ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், ஆஜித், நாசரின் மகன் அபி ஹாசன், நடிகை ரேகா ஆகியோர் மட்டும் உறுதியாகியுள்ளது.  அதேபோல், பாடகர் வேல்முறை பிக்பஸ் வீட்டிற்கு செல்லவிருக்கிறார். 

கடந்த முறை மோகன் வைத்தியா கலந்து கொண்டார். இந்த முறை வேல் முருகன் செல்லவுள்ளார். இவர் நாட்டுப்புற பாடகர் ஆவார். சினிமாவில், ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா, மதுர குலுங்க குலுங்க உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்முருகன் கலந்து கொள்வதால் பிக்பாஸ் சீசன் 4 களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News