×

பிறந்தநாளிலே மரணித்த திமுக மாவீரன்... யார் இந்த அன்பழகன்....?

சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அங்கு நடத்திய ப்ரோசோதனையில் தான் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதை  கண்டறிந்தனர்.

 

திமுகவில் வெளிப்படையாக பேசும் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் ஜெ.அன்பழகன். 2001ல் தியாகராய நகர் தொகுதியிலும், 2011 மற்றும் 2016 தேர்தல்களில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்.

அத்துடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ள இவர்,  2013ல் ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளராகவும், ''யாருடா மகேஷ்'' என்ற படத்திற்கு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.

மேலும் நடிகர் விஜய்யின் தலைவா படத்தில் வெளியீட்டில் அரசியல் ரீதியான பிரச்னை ஏற்பட்ட போது சம்மந்தப்பட்ட படத்தரப்பு விரும்பினால் தன்னுடைய அன்பு பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் படத்தை வெளியிடத் தயார் என்று கூறியிருந்தவர் இதே அன்பழகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News