×

திருமணம் பற்றி மனம் திறந்தார் டாப்ஸி
காதலன் யார்? பளிச் பதில்கள்

 
topsi1


தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சக்கை போடு போட்ட படம் ஆடுகளம். இந்தப்படம் 2011ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தேசிய திரைப்பட விருதுகளில், ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக தனுஷ_க்கு சிறந்த நடிகருக்கான விருதும், இயக்குனர் வெற்றிமாறனுக்கு தங்கத்தாமரை விருதும்  கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிப்படத்தைத் தொடர்ந்து டாப்ஸி வந்தான் வென்றான் படத்திலும் நடித்தார்.  இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆனவர் டாப்ஸி. ஆடுகளம் படத்தில் உன்னை வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா என்று யாத்தே யாத்தே பாடலில் ஒரு வரி வரும். உண்மையிலேயே  இவரை அப்படித்தான் வளர்த்து இருப்பார்கள் போல...அம்மணி அம்புட்டு கலரு...வெள்ளைக்காரி மாதிரியே இருப்பார். 

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி, தெலுங்கு திரையுலகிலும் வலம் வருபவர். பஞ்சாபிய சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். பின்னர் அழகுக்கலை நிபுணராக இருந்தார்.   

தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வரும் நடிகை டாப்ஸி, இவருக்கு தமிழில் கடைசியாக வெளியான படம் வை ராஜா வை. 4 வருடங்களுக்குப் பிறகு தற்போது லஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஜனகனமன படத்தில் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் என்பவரும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தனது காதலர் குறித்து நடிகை டாப்சி வெளிப்படையாக கூறியது இதுதான்.

'சினிமா துறையில் இருப்பவரை காதலிக்க விரும்பவில்லை. எனது சொந்த வாழ்க்கையும், தொழில் சார்ந்த வாழ்க்கையும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மத்தியாஸ் எனக்கு நெருக்கமான வட்டாரத்திற்குள் இருக்கிறார்.

அதனால் அவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறேன். திருமணம் பற்றி இப்போது சிந்திக்கவில்லை. ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்கள் என்று நடிக்கும் எண்ணிக்கை 2 அல்லது 3 படங்கள் என்று குறையும்போது தான் திருமணத்துக்கு தயாராவேன்" என்றார்.

படங்கள் எப்போது குறைவது, டாப்ஸியின் திருமணம் நடப்பது எப்போது என ஏக்கப்பெருமூச்சு விடுகின்றனர் ரசிகர்கள். டாப்ஸியின் முழு பெயர் டாப்ஸி பண்ணுவாம். பார்த்தாலே பண்ணு மாதிரிதான் இருக்கார் அம்மணி.

From around the web

Trending Videos

Tamilnadu News