Categories: Cinema News latest news

விஜய் 69 படத்தில் சத்யராஜிக்குப் பதிலாக அந்த நடிகரா? பிரபலம் சொல்லும் புதுத்தகவல்

விஜய் 69 படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். விஜய் உடன் பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் படத்தில் இருந்து விலகி விட்டார். அவரது இடத்திற்கு வேறு ஒரு பிரபல நடிகர் வந்ததாக சொல்லப்படுகிறது. யார் என்னன்னு பார்க்கலாமா…

முரண்பட்ட கொள்கை

நடிகர் விஜய் சத்யராஜ் உடன் தலைவா, மெர்சல் படங்களில் நடித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் விஜய் 69 படத்திலும் அவர் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை என்று முதலில் சொல்லப்பட்டது.

ஆனால் அதுவல்ல உண்மை என்று பிறகே தெரிய வந்தது. விஜய் கட்சியின் கொள்கையும், சத்யராஜின் கொள்கையும் முரண்பட்டது. அதனால் இந்தப் படத்தில் இது தொடர்பான காட்சிகள் ஏதாவது வந்தால் அவருடைய கொள்கைக்கு ஒத்துப் போக வேண்டிய சூழல் வந்து விடும்.

சத்யராஜ்

சத்யராஜ் புரட்சித்தமிழன் வேறு. அதனால் தன்மானம் மிக்க அவர் தன் கொள்கைக்குப் பங்கம் வந்தால் எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டார். அதுபோன்ற சூழல் முன்கூட்டியே வராமல் தடுப்பதற்காகத் தான் அந்தப் படத்தில் இருந்து விலகியதாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் விஜய் 69 படத்தில் சத்யராஜிக்குப் பதிலாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறாரா என வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

சிவராஜ்குமார்

shivarajkumar

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படத்தில் சத்யராஜ் விலகியதற்குப் பின்னால் அவங்க எந்த நடிகரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. அவங்க ஒப்பந்தம் செய்த ஒரே நடிகர்னா அது சிவராஜ்குமார் தான். அதனால் சத்யராஜின் கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடிப்பதற்கு ரொம்பவே வாய்ப்புகள் இருக்கு என்று தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு அச்சாரம்

விஜய்க்கு இது தனது திரையுலகப் பயணத்தில் கடைசி படம் என்று அறிவித்து விட்டதால் படத்தை எவ்வளவு சிறப்பாகக் கொடுக்க முடியுமோ அந்தளவுக்குக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, இதற்குப் பிறகு முழுநேர அரசியலில் இறங்க உள்ளதால் படத்தில் அவரது கொள்கை சம்பந்தப்பட்ட சில காட்சிகளும் இருக்கும் என்று தெரிகிறது. இந்தப் படம் அவரது அரசியலுக்கு அச்சாரமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v