×

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் யார் தெரியுமா? - நினைவிடம் எங்கு தெரியுமா?

நாம் வரலாற்றில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை பற்றி படித்திருப்போம். கேள்வி பட்டிருப்போம். ஆனால், இலங்கையை தமிழ் பேசும் மன்னர்கள் ஆண்டார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. பல நூறு வருடங்கள் தமிழர்கள்தான் இலங்கையை ஆண்டுள்ளனர்.
 

இலங்கையை கடைசியாக ஆண்ட தமிழ் மன்னன் விக்கிரம ராஜசிங்கா ஆவார். இவரின் உடல்வேலூர் மாவட்டம் பாலாற்றங்கையில் புதைக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்காக நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அவரின் 188வது நினைவு தினத்தில் அவரின் நினைவிடத்தில் தமிழ் ஆர்வலர்களும், ராஜாவின் குடும்ப வாரிசுகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.  ஆங்கிலேயர் படையெடுப்பின் போது மன்னன் விக்கிரமராஜா வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். அதன்பின் அங்கேயே அவர் மரணமும் அடைந்தார். எனவே, அங்கு அவருக்கு முத்து மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

அவரின் நினைவிடத்தை சுற்றுலா பயணிகளுன் கண்டுகளிக்கும் படி அரசு பராமரிக்க வேண்டும் என அவரின் வாரிசுகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News