×

பிக்பாஸ் 3வது வைல்ட் கார்ட் எண்ட்ரி யார் தெரியுமா? - இதோ புகைப்படம்
 

 

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போதுதான் சூடு பிடித்துள்ளது. நடிகர் ஆரி எல்லோரையும் வெளுத்து வாங்கி வருகிறார். பாலாஜியின் நடவடிக்கை பார்வையாளருக்கு வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. புது வரவாக ரேடியோ தொகுப்பாளினி சுசித்ரா உள்ளே வந்துள்ளார்.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா மற்றும் பாடகர் வேல்முருகன் ஆகியோர் வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பிக்பாஸ் வீட்டிற்கு 3வது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக செல்லவுள்ளார். இதற்காக சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே மற்ற போட்டியாளர்களும் அதே ஹோட்டலில்தான் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பான புகைப்படத்தை இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே, பகல் நிலவு சீரியலில் ஷிவானியுடன் நடித்த நடிகர் ஆசிம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இந்திரஜா செல்வது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News