×

பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி யார் தெரியுமா? - ஆச்சர்ய தகவல்கள்..

 

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 4 நாட்களுக்கு முன்பு துவங்கியது. இதில், நடிகை ஷனம் ஷெட்டி, நடிகை ஷிவானி நாராயணன், அறந்தாங்கி நிஷா, சின்னத்திரை தொகுப்பாளர் அர்ச்சனா, ரியோ ராஜ், அனிதா சம்பத், நாட்டுப்புற மற்றும் சினிமா பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, நடிகை ரேகா, நடிகை கேப்ரில்லா, நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி, நடிகை ரம்யா பாண்டியன், அனிதா சம்பத், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகை சம்யுக்தா கார்த்திக், மாடலிங் துறையை சேர்ந்த பாலா மற்றும் சோம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இதில் சுரேஷ் சக்ரவர்த்தி பற்றி பலருக்கும் தெரியாது. தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பாலசந்தர் இயக்கத்தில் மம்முட்டி நடித்த அழகன் திரைப்படத்தில் சொக்கு எனும் வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். 

‘பாட்டிகள் ஜாக்கிரதை’ என்ற பெயரில் வெளியான குறுந்தொடரில் பாட்டி வேடத்தில் நடித்தவர். அவ்வை சண்முகி படத்தில் நடிப்பதற்கு இந்த கதாபாத்திரமே கமலுக்கு இன்ஸ்பிரேஷன்.

திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியையும் சில காலம் நடத்தியுள்ளார்.  ஆஸ்திரேலியாவில் பனானா ட்ரீ என்கிற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு வரும் சினிமா படப்பிடிப்பு குழுவினருக்கும் உதவி வருகிறாராம்.  மேலும், அன்புடன் ராமகிருஷ்ணன் என்கிற பெயரில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து சமையல் நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

suresh

சமையல் வித்தகரான இவர் இவரின் பெயரிலேயே ஒரு யூடியூப் சேனலும் வைத்து அதில் விதவிதமான சமையல்களை எப்படி செய்வது என வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News