×

ரஜினி படத்தில் நடித்த நடிகைகள் யார் தெரியுமா? - வெளியான புகைப்படம்

 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவாஜி. இப்படத்தின் கதை கருப்பு பணத்தை மையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில், கதாநாயகி ஸ்ரேயாவை ரஜினி ஒரு தலையாக காதலிக்கும் போது அவரின் வீட்டிற்கு சென்று லூட்டி அடிப்பார். ஆனால், ஸ்ரேயாவின் குடும்பம் அவரை வெளியே விரட்டும். அப்போது, பக்கத்து வீட்டுக்காரர் வேடத்தில் நடித்திருந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா ’எனக்கு 2 பொண்ணுங்க இருக்காங்க..அங்கவை.. சங்கவை.. வேணும்னா வந்து பழகுங்க.. புடிச்சிருந்தா கல்யாணம் பண்னிக்குங்க.. இல்லனா பிரண்ட்ஸா இருப்போம்’ என பேசி நடித்திருப்பார்.

sivaji

அவரின் 2 பெண்களும் கருப்பான பெண்களாக இருப்பார்கள். அவர்களை கண்டு ரஜினியும், விவேக்கும் ஜெர்க் ஆவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்

இந்நிலையில், அந்த வேடத்தில் இரட்டை சகோதரிகள் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் உண்மையிலேயே கருப்பு நிறம் உள்ளவர்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News